சுடச்சுட

  

  உ.பி.: பிரியங்காவின் பொறுப்பில் 41 தொகுதிகள்: ராகுல் நடவடிக்கை

  By DIN  |   Published on : 13th February 2019 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவின் பொறுப்பில் 41 மக்களவைத் தொகுதிகளையும், மேற்கு பகுதி பொதுச் செயலாளர் ஜோதிராதித்ய சிந்தியாவின் பொறுப்பில் 39 தொகுதிகளையும் ஒதுக்கி, கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
  இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், உத்தரப் பிரதசேத்தின் லக்னௌ, அமேதி, ரேபரேலி, சுல்தான்பூர், கோரக்பூர், வாராணசி, பூல்பூர், அலாகாபாத் உள்ளிட்ட 41 தொகுதிகளுக்கு பிரியங்கா பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சஹாரன்பூர், கைரானா, முஸாஃபர்நகர், மொராதாபாத், காஜியாபாத், மதுரா, பிலிபித், கான்பூர் உள்ளிட்ட 39 தொகுதிகள், சிந்தியாவின் பொறுப்பில் ஒதுக்கப்பட்டுள்ளன.
  முன்னதாக, ராகுல், பிரியங்கா, சிந்தியா ஆகியோர், லக்னௌவில் திங்கள்கிழமை கூட்டாக சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். அப்போது பேசிய ராகுல், பாஜக ஆட்சியை அகற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாக கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai