சுடச்சுட

  

  நாடாளுமன்ற ஒப்புதலில்லாமல் கூடுதலாக ரூ.1,157 கோடி செலவு செய்த நிதியமைச்சகம்: சிஏஜி

  By DIN  |   Published on : 13th February 2019 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  நாடாளுமன்றத்தின் ஒப்புதலில்லாமல், 2017-18ஆம் ஆண்டில் கூடுதலாக ரூ.1,157 கோடியை நிதியமைச்சகம் செலவு செய்திருப்பதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அமைப்பு (சிஏஜி)தெரிவித்துள்ளது.
  மத்திய அரசின் வரவு செலவு குறித்த கணக்குகளை ஆய்வு செய்து, நாடாளுமன்றத்தில் தனது அறிக்கையை சிஏஜி தாக்கல் செய்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தற்போதைய வழிகாட்டுதல்களின்படி, உதவித் தொகை, மானியங்கள், புதிய சேவை, சேவைக்கான  புதிய கருவி ஆகியவற்றுக்கு மேற்கொள்ளும் செலவுக்கு நாடாளுமன்றத்தின் 
  முன் ஒப்புதலை மத்திய நிதியமைச்சகம் கட்டாயம் பெற வேண்டும். 
  நாடாளுமன்ற பொது கணக்கு குழுவால் (பிஏசி) முன்பு தாக்கல் செய்யப்பட்ட 83ஆவது அறிக்கையில், மானியங்கள், நிதியுதவி ஆகியவை தொடர்பான விதிகளை நிதியமைச்சகம் சரியாக கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக நிதியமைச்சகத்துக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு சில பரிந்துரைகளையும் அளித்திருந்தது. 
  இருப்பினும், புதிய சேவை மற்றும் சேவைக்கான புதிய கருவி ஆகியவற்றை பெறுவதில் சரியான நடைமுறையை மத்திய நிதியமைச்சகம் வகுக்காமல் உள்ளது. இதன் விளைவாக,  2017-18ஆம் ஆண்டில் திட்டமிட்டதை விட கூடுதலாக ரூ.1,156.80 கோடி செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் வரும் பொருளாதார விவகாரங்களுக்கான துறை, கூடுதல் செலவீனங்களுக்காக நாடாளுமன்றத்திடம் ஒப்புதலை பெறுவதில் தோல்வியடைந்துவிட்டது. இதுபோன்ற தீவிர பிரச்னைகள் மீண்டும் எழாமல் தவிர்ப்பதற்கு, அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் நிதி விவகாரத்தில் ஒழுங்கை கடைப்பிடிக்கும் வகையில், உறுதியான நடைமுறையை மத்திய நிதியமைச்சகம் வகுக்க வேண்டியது அவசியமாகும் என்று அந்த அறிக்கையில் சிஏஜி குறிப்பிட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai