சுடச்சுட

  

  பாரத ரத்னா, பத்ம விருதுகளை பெயருக்கு முன் சேர்க்கக் கூடாது: மத்திய அரசு

  By DIN  |   Published on : 13th February 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bharath_rathna


  பாரத ரத்னா, பத்ம விருதுகள் ஆகியவற்றை பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
  குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகியவற்றை பெயருக்கு முன்போ அல்லது பின்னாலோ சேர்த்துக் கொள்ள கூடாது.
  அவ்வாறு சேர்த்தால் சம்பந்தப்பட்ட நபர் விருதை திருப்பி ஒப்படைக்க அறிவுறுத்தப்படுவார்கள். சம்பந்தப்பட்ட நபருக்கு அளிக்கப்பட்ட விருதை ரத்து செய்யவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
  இந்த விருதுகள் வழங்கிய பிறகு, அவற்றை பெற்றுக் கொண்டவர்களிடம் பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ சேர்க்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுவார்கள் என்று அந்த பதிலில் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் குறிப்பிட்டுள்ளார்.
  கடந்த 1955ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 38 பேருக்கு பாரத ரத்னாவும், பத்ம விபூஷண் (307 பேர்), பத்ம பூஷண் (1,255 பேர்), பத்ம ஸ்ரீ (3,005 பேர்) வழங்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai