சுடச்சுட

  

  ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்

  By DIN  |   Published on : 13th February 2019 11:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  News_1_rafale1


  புது தில்லி: பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

  ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக முறைகேடு நடந்ததாகவும், இதில் பிரதமர் மோடிக்கு பங்கிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கும் நிலையில், மத்திய கணக்குத்  தணிக்கைக் குழுவின் (சிஏஜி) அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

  வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இது தற்போதைய அரசின் கடைசி கூட்டத் தொடராகும். 

  பிரான்ஸைச் சேர்ந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய அரசு அந்நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. எனினும், அந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வருவதால், அது சர்ச்சைக்குரிய அரசியல் விவகாரம் ஆகியுள்ளது. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து வருகிறது. 

  இவ்விவகாரத்தில் ஊழல் இருப்பதற்கான முகாந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் சிஏஜி தணிக்கை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

  எனினும், அந்த ஒப்பந்தத்தில் ஏற்கெனவே தொடர்புடையவர் என்ற காரணத்தால், அதன் தணிக்கை நடவடிக்கையில் இருந்து தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) ராஜீவ் மெஹரிஷி தன்னை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 

  நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட காலகட்டத்தில் ராஜீவ் மெஹரிஷி நிதித் துறைச் செயலராக இருந்ததை குறிப்பிட்டு அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் இவ்வாறு கூறினார். எனினும், சிஏஜிக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் பொய்யாக இவ்வாறு குற்றம்சாட்டுவதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பதிலடி கொடுத்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai