சரத் பவார் இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு: நடந்தது என்ன?

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கேஜரிவால், ஃபரூக் அப்துல்லா ஆகிய தலைவர்கள் சந்தித்தனர். 
சரத் பவார் இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு: நடந்தது என்ன?


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கேஜரிவால், ஃபரூக் அப்துல்லா ஆகிய தலைவர்கள் சந்தித்தனர். 

தில்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஜனநாயகத்தை காப்போம் என்று மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு ராகுல் காந்தி தெரிவிக்கையில், 

"ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடைபெற்றது. இந்திய அமைப்புகள் மீது பாஜக நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராக சண்டையிட வேண்டும் என்ற பிரதான இலக்குக்கு அனைவரும் ஒப்புக்கொண்டோம். குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து ஆலோசனையை தொடங்குவதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளோம். ஒன்றிணைந்து செயல்பட்டு பாஜகவை வீழ்த்துவோம் என்கிற அர்ப்பணிப்பு எங்களிடம் உள்ளது" என்றார். 

இதைத்தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவிக்கையில், 

"தேசிய அளவில் நாங்கள் அனைவரும் சேர்ந்து பணியாற்றுவோம். குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவோம். தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை நாங்கள் அமைப்போம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com