சுடச்சுட

  
  Rahul_Gandhi-


  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 14-ஆம் தேதி குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார். 

  'மக்களின் கோபம்' என்ற பெயரில் குஜராத் மாநிலம், வல்சாத் மாவட்டத்தில் உள்ள லால்துங்ரி கிராமத்தில் வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 14-ஆம் தேதி) காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக கட்சியின் செய்திதொடர்பாளர் மனீஷ் தோஷி தெரிவித்தார். 

  2017 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி குஜராத்தில் கடுமையாக பிரசாரம் மேற்கொண்டார். அந்த தேர்தலில் மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுள் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. எனினும், அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவையில் தனது உறுப்பினர்களை 60-இல் இருந்து 77 ஆக அதிகரித்தது.   

  இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக குஜராத்தில் தனது வலிமையை அதிகரிக்க காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai