நிதி நிறுவன மோசடி தடுப்பு மசோதா மக்களவையில் அறிமுகம்

நிதி நிறுவனங்களின் மோசடிகளால் பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாக்கும் வகையில்,  நிதி நிறுவன மோசடி தடுப்பு மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. 


நிதி நிறுவனங்களின் மோசடிகளால் பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாக்கும் வகையில்,  நிதி நிறுவன மோசடி தடுப்பு மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. 
முன்னதாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீட்டு நடத்தி நிதி முறைகேடு செய்வதாக புகார்கள் அதிகரித்ததை அடுத்து அதனைத் தடுக்கும் வகையிலும், பொது மக்களின் நலன்களைக் காக்கும் நோக்கிலும் இந்த மசோதா கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மசோதாப்படி, சீட்டு நிதித் திட்டங்களை நடத்தும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள், அரசிடம் உரிய அனுமதி பெறாமல் தன்னிச்சையாக மக்களிடம் இருந்து பணம் வசூலிக்க முடியாது. அதைமீறி, அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்படுகிறது. 
அதையடுத்து இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. நிலைக்குழு ஒப்புதல் அளித்ததையடுத்து தற்போது மீண்டும் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சிகள் அக்கறை காட்டியுள்ளன. புதன்கிழமை கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு இந்த மசோதா மீதான விவாதத்தை தொடங்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 
கூட்டத்தொடரின் கடைசி நாளான புதன்கிழமை இந்த மசோதா நிறைவேற்றப்படாவிட்டால் மக்களவை கலையும்போது, இந்த மசோதா காலாவதியாகிவிடும். 
எனவே, இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com