
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பு நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 70 பாதுகாப்புப் படை வாகனங்கள் திரும்பிக்கொண்டிருந்தன.
அப்போது புலவாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தின் காரணமாக பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முஹம்மது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இதற்கு இந்தியாவின் அனைத்து அரசியல் தலைவர்களும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.