தில்லி துணைநிலை ஆளுநர் - முதல்வர் இடையேயான மோதல்: உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு

தில்லி துணை நிலை ஆளுநர் - முதல்வர் இடையே யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.
தில்லி துணைநிலை ஆளுநர் - முதல்வர் இடையேயான மோதல்: உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு


புது தில்லி : தில்லி துணை நிலை ஆளுநர் - முதல்வர் இடையே யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதையடுத்து தில்லி  அதிகார மோதல் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

நீதிபதி சிக்ரி வழங்கிய தீர்ப்பில், இணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேல் இருக்கும் பதவிகளை நியமிக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கே உள்ளது. இணைச் செயலாளருக்குக் கீழே உள்ள பதவிகளை மாநில அரசு நியமித்துக் கொள்ளலாம். 

தில்லியில் காவல்துறை அரசு வசம் இல்லாததால் அதனை துணை நிலை ஆளுநரே கவனிப்பார். விசாரணை ஆணையம் அமைக்கும் அதிகாரம் தில்லி மாநில அரசுக்கு இல்லை. ஊழல் கண்காணிப்பு அமைப்பு துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் வரும். கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் மாநில அரசுக்கேக் கூடுதல் அதிகாரம் உள்ளது என்று  என்று சிக்ரி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com