புல்வாமா தாக்குதல்: வந்தேபாரத் விரைவு ரயில் துவக்கி வைக்கப்பட்டது ஏன்? இதோ பதில்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில், வந்தே பாரத் விரைவு ரயில் துவக்கி வைக்கப்பட்டது பெரும் சலசலப்பை
புல்வாமா தாக்குதல்: வந்தேபாரத் விரைவு ரயில் துவக்கி வைக்கப்பட்டது ஏன்? இதோ பதில்


ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில், வந்தே பாரத் விரைவு ரயில் துவக்கி வைக்கப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி - வாராணசி இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

புல்வாமா தாக்குதல் நடந்திருக்கும் நிலையில், இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது குறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார்.

அதாவது, 26/11 தாக்குதலின் போது மும்பை மக்கள் அதனை எப்படிக் கையாண்டார்கள் என்பதை முன்னுதாரணமாகக் கொண்டே, வந்தேபாரத் ரயில் துவக்க விழாவை ரத்து செய்யாமல், முன்னெடுத்துச் செல்ல தூண்டுகோலாக இருந்தது என்று அமைச்சர் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை தாக்குதலின் போது, எதற்காகவும் அஞ்சி பொதுமக்கள் யாரும் வீட்டுக்குள் முடங்கிவிடவில்லை. தங்களது அன்றாடப் பணிகளைச் செய்ய வழக்கம் போல அனைவரும் வெளியே கிளம்பினர். அதேப்போலத்தான் வந்தேபாரத் விரைவு ரயிலும் இன்று தனது சேவையைத் துவக்கியுள்ளது. இது மக்களுக்காக அரசு ஆற்றும் கடமையாகும்.

இதுதான் பயங்கரவாதத்துக்குக் கொடுக்கும் மிகப்பெரிய பதிலடி என்று கோயல் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com