பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளர்

பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் ஹினா ஜெய்ஸ்வால் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளர்

புதுதில்லி: பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் ஹினா ஜெய்ஸ்வால் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விமானப் படையில் உள்ள ஜெட் விமானங்கள், போர் விமானங்களில் உள்ள சிக்கலான விமானக் கருவிகளை கையாள்வது மற்றும் அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு சிறப்புமிக்க திறமை அவசியமாதொன்றாகும்.

அத்தகைய பணிகளில் திறமை வாய்ந்த மிக்க ஹினா ஜெய்ஸ்வால், விமானப் பொறியாளராக இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் செயல்பாட்டு பிரிவுகளில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது பணிகளில் பெரும்பாலும் ஆபத்து மிக்க உலகின் அதி உயர போர்களமானசி யாச்சின் பனிப்பாறைகளில் சென்று பணியாற்ற அனுப்பப்பட வாய்ப்பு உள்ளது. அத்துடன் அந்தமான் கடற்கரைப் பிரதேசங்கள், ஆளரவமற்ற எல்லைப்பகுதிகளில் என மிகவும் சிக்கலான பணியிடங்களிலேயே அவர் பணியாற்ற வேண்டியிருக்கும்.

ஹினா ஜெய்ஸ்வால் , பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை என்ஜீனியரிங் பட்டப்படிப்பு முடித்தவராவார்.

அவர் இதுகுறித்து செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியில், ''இது எனது குழந்தைப் பருவத்து கனவு நிறைவேறிய உண்மையான தருணம்'' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com