புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு ஆதரவாக சீனா முடிவு 

புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு ஆதரவாக சீனா எடுத்துள்ள முடிவு இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு ஆதரவாக சீனா முடிவு 

புது தில்லி: புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு ஆதரவாக சீனா எடுத்துள்ள முடிவு இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி ஒருவர்  மோதி வெடிக்க செய்ததில் 43 வீரர்கள் பலியாகினர்.

வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புக்கு தலைவராக மசூத் அசார் என்பவர் செயல்பட்டு வருகிறார்.

மசூத் அசாரை ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூலம் சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து, அவரது அமைப்பை முடக்கும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. 

இதுதொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதி என அறிவிக்க இந்தியா கொண்டுவந்த வந்த தீர்மானத்தை, பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படும் நோக்கில், சீனா தனது 'வீட்டோ' அதிகாரத்தால் ரத்து செய்தது. அதன்பின் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இதே தீர்மானத்தைக் கொண்டுவந்த போதிலும் நிறைவேற்ற முடியவில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று சீனா மீண்டும் தெரிவித்துள்ளது.

முன்னதாக புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குக் சீனா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com