புல்வாமா விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி தீர்மானம் நிறைவேற்றம்

பயங்கரவாத தாக்குதலை கண்டித்து இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிணைந்து செயல்படுவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளன.  
புல்வாமா விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி தீர்மானம் நிறைவேற்றம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் வியாழக்கிழமை பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா உட்பட பெரும்பாலான உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து மத்திய அரசின் அனைத்து கட்சிக் கூட்டம் சனிக்கிழமை பிற்பகல் 11 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். 

இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, ஜோதிர்திய சிந்தியா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் சுதிப் பந்தி உபாத்தியாய் மற்றும் தேரேக் ஓ'பிரயன், சிவ சேனை கட்சியின் சஞ்சய் ரௌத், டி.ராஜா, ஃபரூக் அப்துல்லா, ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.அப்போது புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அரசு தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, பயங்கரவாத தாக்குதலை கண்டித்து இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபோன்ற சவால் நிறைந்த சூழலில் இந்தியா உறுதியையும், போராட்ட குணத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ள ஒட்டுமொத்த தேசமும் ஒரே கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை அழிக்கவும், நாட்டின் தன்மானத்தை காக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com