புல்வாமாவில் பயங்கவாத தாக்குதல்: உதவியதாக 7 இளைஞர்கள் கைது

பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் வியாழக்கிழமை நடத்திய
புல்வாமாவில் பயங்கவாத தாக்குதல்: உதவியதாக 7 இளைஞர்கள் கைது

    
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியதாக 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் வியாழக்கிழமை நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் பல வீரர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தாக்குதலுக்குக் சர்வதேச தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதையும், அவர்களுக்குப் புகலிடம் அளிப்பதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசு சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பயங்கரவாதிகளுக்கு உதவியாதாக புல்வாமா மற்றும் அவந்திபுராவை சேர்ந்த 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுகிறது. புல்வாமா மாவட்டம் காகாபோராவை சேர்ந்த அதில் அகமது என்ற இளைஞரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் தெற்கு காஷ்மீரின் டிரால் பகுதியைச் சேர்ந்த மிதூரா பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டமிடல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் கடந்த ஆண்டு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, எஸ்யுவி ரக காரில் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் நிரப்பப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்காக 100 முதல் 150 கிலோ எடையுள்ள அதிக வீரியம் மிக்க ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருட்களை பயங்கரவாதிகள் பயன்படுத்தியுள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் பலர், ஆண்டு விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com