ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை

ஜம்மு-காஷமீரைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க இதர மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. 

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதும் வசிக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அந்தத்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி வியாழக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு உலகம் முழுவதும் இருந்து கடும் கண்டனம் குவிந்து வருகிறது.

இந்நிலையில், இதர மாநிலங்களில் வசிக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிலருக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com