தற்கொலைத் தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: உத்தர பிரதேசத்தில் நால்வர் கைது

புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 இதுகுறித்து அந்த மாநில போலீஸார் கூறியதாவது: கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் புல்வாமா தாக்குதலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அவர்கள் 4 பேர் மீதும் தகவல் தொடர்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 பாலியா மாவட்டத்தில் ரவி பிரகாஷ் மெளரியா என்பவர், தற்கொலைத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து தெரிவித்திருந்தார். தாம் சமாஜவாதி கட்சி ஆதரவாளர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
 லக்னெளவில் கல்லூரி மாணவர் ரஜப் கான், அந்தத் தாக்குதலுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததை அடுத்து சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். ரஜப் கானை கல்லூரியிலிருந்து நீக்கியதாக அவர் பயிலும் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
 மாவ் நகரைச் சேர்ந்த முகமது ஒசாமா, சமூக வலைதளத்தில் தற்கொலைத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டிருந்தார். பான்சி பகுதியில், புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் முகமது தெளஃபிக் என்ற நபர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார். பின்னர் சமூக வலைதளத்திலும் அதே கருத்தை தெரிவித்திருந்த அவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com