புல்வாமா தாக்குதல் வீரர்களின் குடும்பத்தினருக்கான நிதியை ரூ.50 லட்சமாக அதிகரித்தது ராஜஸ்தான் அரசு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராஜஸ்தான் வீரர்கள் 5 பேரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட நிதியை ரூ.50 லட்சமாக அந்த மாநில அரசு அதிகரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராஜஸ்தான் வீரர்கள் 5 பேரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட நிதியை ரூ.50 லட்சமாக அந்த மாநில அரசு அதிகரித்துள்ளது.
 இதுதொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 நாட்டை பாதுகாக்கும் பணியில் ராஜஸ்தான் மாநில வீரர்கள் தங்களது உயிரையே தியாகம் செய்துள்ளனர். இந்நேரத்தில் அந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு உறுதுணையாக நிற்கும்.
 புல்வாமா தாக்குதலில் பலியான 5 வீரர்களின் குடும்பத்தினருக்கும் ராஜஸ்தான் அரசு ரொக்கமாக ரூ.50 லட்சம் அளிக்கும் அல்லது ரூ.25 லட்சம் ரொக்கம், 10 ஏக்கர் நிலம் ஆகியவையோ அல்லது வீட்டு வசதி வாரிய வீட்டுடன் சேர்த்து ரூ.25 லட்சம் ரொக்கமோ அளிக்கப்படும்.
 வீரர்களின் குடும்பத்திலுள்ள நபர் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்படும். அவர்களது வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். வீரர்களின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் அளிக்கப்படும்.
 தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும், குடும்பத்தினருக்கு தைரியத்தை அளிக்கவும் கடவுளை பிரார்த்திக்கிறேன். இதேபோல், தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைந்து குணமாகவும் பிரார்த்தனை நடத்துகிறேன் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 புல்வாமாவில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் நடத்தியத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் பலியாகினர். இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் 5 பேரும் அடங்குவர். இவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் அரசு முதலில் அறிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com