பொக்ரானில் இந்திய விமானப்படை மிகப் பெரிய ஒத்திகை

ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் மிகப் பெரிய ஒத்திகையை இந்திய விமானப்படை சனிக்கிழமை மேற்கொண்டது.
பொக்ரானில் இந்திய விமானப்படை மிகப் பெரிய ஒத்திகை

ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் மிகப் பெரிய ஒத்திகையை இந்திய விமானப்படை சனிக்கிழமை மேற்கொண்டது.
 ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இரண்டு நாள்கள் மட்டுமே ஆன நிலையில், விமானப்படை இந்த ஒத்திகையை நடத்தியுள்ளது.
 பாகிஸ்தானின் எல்லைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள பொக்ரான் பகுதியில் "வாயு சக்தி' என்ற பெயரில் மிகப் பெரிய ஒத்திகையை இந்திய விமானப்படை சனிக்கிழமை மேற்கொண்டது. விமானப்படையிடம் உள்ள உயர் ரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை இந்த ஒத்திகையில் பங்கேற்றன.
 இலகு ரக போர் விமானங்கள், தொழில்நுட்ப மேம்பாடு கொண்ட ஹெலிகாப்டர்கள், தரையிலிருந்து ஏவப்பட்டு விண்ணிலுள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட "ஆகாஷ்' ஏவுகணை, விண்ணிலுள்ள இலக்கைத் தாக்கி அழிக்க விண்ணிலிருந்து ஏவப்படும் "அஸ்திரா' ஏவுகணை உள்ளிட்டவற்றை இந்த ஒத்திகையின்போது விமானப்படை சோதித்தது.

 போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் பயிற்சியில் பகலிரவு பாராமல் ஈடுபட்டன. மிக்-29, சுகோய்-30, மிரேஜ்-2000, ஜாகுவார், மிக்-21, பைசான், மிக்-27, ஹெர்குலிஸ், ஏஎன்-32 உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த 137 போர் விமானங்கள் "வாயு சக்தி' ஒத்திகையில் ஈடுபட்டன.
 இந்த ஒத்திகையை ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இந்திய விமானப்படையின் கெüரவ அதிகாரியான சச்சின் டெண்டுல்கரும் இந்த ஒத்திகையைப் பார்வையிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com