சுடச்சுட

  

  நாராயணசாமி தர்ணாவுக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் நேரில் சென்று ஆதரவு 

  By DIN  |   Published on : 18th February 2019 04:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kejriwal_+_narayanasamy

   

  புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மேற்கொண்டு வரும் தர்ணாவுக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

  புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக அந்த மாநில முதல்வர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் மாளிகை எதிரில் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த விவகாரம் குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்  தனது ட்விட்டர் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டிருந்த பதிவில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நாராயணசாமி கடந்த மூன்று நாள்களாக சாலையோரம் தூங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளார். எந்த மாதிரியான ஜனநாயகம் இது? வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வாக்காளர்களால் தோற்கடிக்கப்பட்டவர்களிடம் கெஞ்சுகின்றனர். தில்லி, புதுச்சேரிவாசிகளின் வாக்கு பிற மாநிலங்களைவிட தாழ்ந்ததா என்ன?' என அதில் கேள்வி எழுப்பியிருந்தார். 

  இந்நிலையில் நாராயணசாமி மேற்கொண்டு வரும் தர்ணாவுக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். 

  தில்லி முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் புதுச்சேரிக்கு திங்கள்கிழமை காலை விமானத்தில் வந்தனர். பின்னர் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு  நண்பகல் வாக்கில் சென்றடைந்தனர்.

  பின்னர் இந்த சந்திப்பு குறித்து, கேஜரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'புதுச்சேரி மக்களோடு ஒற்றுமையாக இருப்பதை வெளிக்காட்ட முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்தேன். அவர் துணை நிலை ஆளுநரின் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடி வருகிறார். தில்லிக்கும் புதுச்சேரிக்கும் வழங்கப்பட்டுள்ள யூனியன் பிரதேச அந்தஸ்த்து அங்குள்ள மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி. முழு மாநில அந்தஸ்து கோரி இணைந்து போராடுவோம்' என்று தெரிவித்துள்ளார்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai