1999 காந்தஹார் சம்பவத்துக்கு காரணமானவர்களை விடுவித்தது யார்? காங்கிரஸ் அமைச்சர் சித்து கேள்வி

நிரந்தரத் தீர்வு காண பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நவ்ஜோத் சிங் சித்து கூறியிருந்தார். 
1999 காந்தஹார் சம்பவத்துக்கு காரணமானவர்களை விடுவித்தது யார்? காங்கிரஸ் அமைச்சர் சித்து கேள்வி

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் கோழைத்தனமானது என்று கடும் கண்டனம் தெரிவித்த சித்து, இதற்கு நிரந்தரத் தீர்வு காண பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த நாட்டின் மீதோ, தனிநபர் மீதோ குற்றம்சாட்டுவதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பால் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் செயல்படுகிறது என்பதை சித்து இப்போது கூட உணரவில்லை என்று அவருக்கு எதிராக கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து பஞ்சாப் காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கூறியதாவது:

எனது கருத்தில் நான் திட்டவட்டமாக இருக்கிறேன். பயங்கரவாதம் பொறுத்துக்கொள்ள முடியாதது. அதற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். பயங்கரவாதம் அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு தடையாக செயல்படுகிறது. 1999 காந்தஹார் சம்பவத்துக்கு காரணமானவர்களை விடுவித்தது யார்? அதற்கு யார் பொறுப்பு? ஒரு ராணுவ வீரர் எதற்காக உயிரிழக்க வேண்டும்? இதற்கு நிரந்தர தீர்வு கிடையாதா? என்று மீண்டும் கேள்வி எழுப்பியிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com