தில்லி முதல் வாராணசிக்கு "வந்தே பாரத்' ரயில்: வர்த்தக சேவை தொடங்கியது

இந்தியாவின் மிக அதிவேக ரயிலாக கருதப்படும் "வந்தே பாரத்' தனது வர்த்தக சேவையை, தில்லியிலிருந்து வாராணசி வரையிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் மிக அதிவேக ரயிலாக கருதப்படும் "வந்தே பாரத்' தனது வர்த்தக சேவையை, தில்லியிலிருந்து வாராணசி வரையிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
 இதுதொடர்பாக சுட்டுரையில் ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள பதிவுகளில், "வந்தே பாரத் ரயில் தனது முதல் வர்த்தக சேவையை தில்லியிலிருந்து வாராணசிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியுள்ளது; அடுத்த 2 வாரங்களுக்கு, இந்த ரயிலுக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டன' எனத் தெரிவித்துள்ளார்.
 வர்த்தக சேவையை தொடங்கும் முன்பு, "வந்தே பாரத்' ரயில், வாராணசி சந்திப்பிலிருந்து தில்லிக்கு வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டது. உத்தர பிரதேசத்தின் துண்ட்லா சந்திப்பிலிருந்து 15 கிமீ தொலைவில் ரயில் வந்து கொண்டிருந்தபோது காலை 6.30 மணியளவில் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது.
 "வந்தே பாரத்' ரயில் கால்நடைகள் மீது மோதியதன் காரணமாக, அதன் சக்கரங்கள் தண்டவாளத்தின் மீது சறுக்கியதையடுத்து ஒரு மணி நேரம் வரை ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், அதில் பயணித்த செய்தியாளர்கள் மற்றொரு ரயிலில் தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 பொறியாளர்கள் கோளாறைக் கண்டறிந்து சரி செய்தவுடன், "வந்தே பாரத்' ரயில் மீண்டும் காலை 8.15 மணியளவில் புறப்பட்டது. தொடக்கத்தில் 10 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு பின்பு வேகம் அதிகரிக்கப்பட்டது.
 இதையடுத்து, சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு "வந்தே பாரத்' ரயில் தில்லியை வந்தடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com