ரிசர்வ் வங்கி குழுவுடன் ஜேட்லி இன்று ஆலோசனை

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி மத்திய குழுவை திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
ரிசர்வ் வங்கி குழுவுடன் ஜேட்லி இன்று ஆலோசனை

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி மத்திய குழுவை திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
 மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்துவது வழக்கமான நடைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவை திங்கள்கிழமை சந்தித்து பேசவுள்ளார்.
 இந்த சந்திப்பின்போது, பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும், நிதி ஒருங்கிணைப்பு திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
 இவை தவிர, ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய இடைக்கால ஈவுத்தொகை குறித்தும் முடிவெடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 2018-19 நிதியாண்டுக்கு ரிசர்வ் வங்கி ரூ.28,000 கோடி இடைக்கால ஈவுத் தொகையை வழங்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
 கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி இடைக்கால ஈவுத்தொகையாக ரூ. 10,000 கோடியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com