ராஜஸ்தானில் சோகம்: திருமண ஊர்வலத்தினர் மீது டிரக் மோதி விபத்து - 13 பேர் பலி, 18 பேர் காயம்

ராஜஸ்தானில் ராம்தேவ் கோயிலுக்கு அருகே திருமண ஊர்வலத்தினர் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 4 குழந்தைகள் உள்பட 13 பேர்
ராஜஸ்தானில் சோகம்: திருமண ஊர்வலத்தினர் மீது டிரக் மோதி விபத்து - 13 பேர் பலி, 18 பேர் காயம்


ஜெய்பூர்: ராஜஸ்தானில் ராம்தேவ் கோயிலுக்கு அருகே திருமண ஊர்வலத்தினர் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 4 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்துள்ளனர்.  

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் உள்ள நிம்பஹரே பகுதியில் இருந்து பன்ஸ்வரா பகுதிக்கு திருமண நிகழ்ச்சிக்காக ஏராளமானோர் ஊர்வலமாக ராம்தேவ் கோயில் அருகே உள்ள மாநில நெடுஞ்சாலை 113 வழியாக சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த டிரக் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஊர்வலத்திற்குள் புகுந்தது. 

திங்கள்கிழமை இரவு நடந்த இந்த கோர விபத்தில், 4 குழந்தைகள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 18 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

முதல்வர் அசோக் கெலாட் வேதனை: விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் தனக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதாக இரங்கல் தெரிவித்தவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்பதாக டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போது உயிரழந்தவர்களில் டவுலத்ரம் (60), பாரத் (30), சுபாம் (5), சோட்டு (5), திலீப் (11), அர்ஜூன் (15), இஷு (19), ரமேஷ் (30), கரண் (28), என 9 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து ராஜஸ்தான் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com