புல்வாமா தாக்குதலை அரசியலாக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை அரசியலாக்கினால் அதனை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டர்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 


புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை அரசியலாக்கினால் அதனை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டர்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
நமது தேசம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அனைவரும் சுயகட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதோ, தரக்குறைவான விமர்சனங்களைக் கூறுவதோ கூடாது. இந்த நேரத்தில் எவரது தனிப்பட்ட பெயரையோ அல்லது அரசியல் கட்சியின் பெயரையோ கூறி இதில் அரசியலை இழுக்க நான் விரும்பவில்லை.
இந்த பயங்கரவாதத் தாக்குதலை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தாலோ அல்லது மற்றவர்களை விமர்சிக்க இதனைப் பயன்படுத்தினாலோ மக்கள் அதனை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பிரதமர் விவாதித்துள்ளாரா? என்ற கேள்விக்கு, இது தேசப் பாதுகாப்பு தொடர்பான விஷயம். அதுபோன்ற விவாதங்கள் நடைபெற்றால்கூட அது தொடர்பாக எவ்வித தகவலும் வெளிப்படுத்தப்பட மாட்டாது. 
ஏனெனில், இதுபோன்ற விஷயங்களில் ரகசியம் காக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். பயங்கரவாதத் தாக்குதலில் பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் வீரமரணமடைந்துள்ளனர். பயங்கரவாதம் என்பது மனிதகுலத்துக்கு எதிரானது. அது ஒழிக்கப்பட வேண்டும் என்று சிங்விபதிலளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com