நிலுவைத் தொகையை அளிக்காத விவகாரம்: அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.550 கோடி திருப்பிச்செலுத்தாத வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 
நிலுவைத் தொகையை அளிக்காத விவகாரம்: அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.550 கோடி திருப்பிச்செலுத்தாத வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எரிக்ஸன் நிறுவனம், அனில் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (ஆர்.காம்) நிறுவனத்தின் உயரதிகாரிகள் இருவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில், "எங்கள் நிறுவனத்துக்கு ரூ.550 கோடியை தராமல் பாக்கி வைத்துள்ளனர். அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தும்வரை, அனில் அம்பானி மற்றும் உயரதிகாரிகள் இருவரும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது. 

இந்த மனுவைக் கடந்த அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், "டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும்' என்று ஆர்.காம் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், ஆர்.காம் நிறுவனம் நிலுவைத் தொகையை இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறி, அந்நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எரிக்ஸன் நிறுவனம் தொடுத்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் அனில் அம்பானி உட்பட 2 இயக்குனர்கள் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது.

மேலும் 4 வாரத்தில் நிலுவைத் தொகை ரூ.453 கோடியை திருப்பிச்செலுத்த வேண்டும் என்றும் தவறினால் அனில் அம்பானி 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. அதேசமயம் குற்றவாளிகள் 3 பேரும் தலா ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அதனை ஒரு மாத காலத்திற்குள் செலுத்தாவிட்டால் ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com