பகுஜன் சமாஜ், சமாஜவாதி தொகுதிப் பங்கீடு: அகிலேஷ், மாயாவதி அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும், சமாஜவாதி 37 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக இறுதி அறிவிப்பை இன்று வெளியிட்டனர். 
பகுஜன் சமாஜ், சமாஜவாதி தொகுதிப் பங்கீடு: அகிலேஷ், மாயாவதி அறிவிப்பு


மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும், சமாஜவாதி 37 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக இறுதி அறிவிப்பை இன்று வெளியிட்டனர். 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலுவான கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் காங்கிரஸை தவிர்த்து கூட்டணி அமைக்கப்போவதாக கடந்த மாதம் அறிவித்தனர். அப்போது மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவித்தனர். மேலும், ரேபரலி மற்றும் அமேதி தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அறிவித்தனர். 

இந்நிலையில், தொகுதிப் பங்கீட்டின் இறுதி அறிவிப்பை மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் இன்று வெளியிட்டனர். அதில், சமாஜவாதி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தனர். 

மீதமுள்ள 5 தொகுதிகளில், அமேதி மற்றும் ரேபரலி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்காக தவிர்த்துள்ளனர். அமேதி மற்றும் ரேபரலி தொகுதிகள் முறையே ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் தொகுதிகளாகும். 

மற்ற 3 தொகுதிகள் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சிக்கு பாக்பத், முசாஃபர்நகர் மற்றும் மதுரா ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் சமாஜவாதி போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை 38 இல் இருந்து 37 ஆக குறைந்தது. 

மேலும், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தின்படி விவிஐபி தொகுதிகளான வாரணசி (பிரதமர் மோடி தொகுதி), லக்னௌ (மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொகுதி), கோரக்பூர் (உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பலம் மிகுந்த தொகுதி) ஆகிய தொகுதிகள் சமாஜவாதி கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com