உ.பி.யில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி: ராகுல், பிரியங்கா பங்கேற்பு

உத்தரப் பிரதேசத்தில், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியும் கல
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த, ஷாம்லியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் அமித் குமாரின் வீட்டில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில், அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல்
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த, ஷாம்லியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் அமித் குமாரின் வீட்டில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில், அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல்


உத்தரப் பிரதேசத்தில், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில், ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் உள்பட 12 வீரர்கள், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் அமித் குமார் கோரிக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம், அவரது சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தங்கையும், கிழக்கு உத்தரப் பிரதேச பொறுப்பாளருமான பிரியங்கா, மேற்கு உத்தரப் பிரதேச பொறுப்பாளர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அமித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது:
வீரமரணம் அடைந்த அமித் குமாரின் தந்தை சற்றுமுன் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அமித்குமாரின் மறைவு சோகத்தை ஏற்படுத்தினாலும், நாட்டுக்காக அவர் உயிர்த்தியாகம் செய்தது பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.
அமித் குமாருக்கு நேர்ந்த சம்பவத்தைப்போல் எனது தந்தைக்கும் (முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி) நேர்ந்தது. எனவே, அந்த வேதனையையும், வலியையும் நாங்கள் அறிவோம். அமித் குமார் குடும்பத்தினரின் துயரத்தை பகிர்ந்துகொள்ளவே இங்கு வந்தோம்.
துணிச்சல்மிக்கவர்கள் நிறைந்த நாடு இந்தியா. இந்த நாட்டுக்கு யாரும் பின்னடைவை ஏற்படுத்த முடியாது. அமித் குமாரின் குடும்பத்தினருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றார் ராகுல் காந்தி.
அமித் குமாருக்கு சிலை: மாநில அமைச்சர் சுரேஷ் ராணாவும் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஷாம்லியில் உள்ள குடானா சாலைக்கு அமித் குமாரின் பெயர் சூட்டப்படும்; இளைய தலைமுறையினர் அறிந்துகொள்வதற்காக, அவருக்கு சிலை அமைக்கப்படும் என்றார்.
இதனிடையே, புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றொரு வீரரான ஷாம்லியைச் சேர்ந்த பிரதீப் குமாரின் வீட்டுக்குச் சென்று ராகுல் காந்தியும், பிரியங்காவும் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com