தொழில்நுட்பத்தால் ஒரு கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு: மகாராஷ்டிர முதல்வர்

தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தியதால், மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் கூறினார்.
தொழில்நுட்பத்தால் ஒரு கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு: மகாராஷ்டிர முதல்வர்


தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தியதால், மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் கூறினார்.
மும்பையில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சங்கம் (நாஸ்காம்) சார்பில் புதன்கிழமை நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:
தொழில்நுட்ப பயன்பாட்டால், பொது விநியோகத் திட்ட முறை முற்றிலும் மாறிவிட்டது. மின்னணுமயமாக்கல் காரணமாக, மாநிலத்தில் ஒரு கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன.  அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அமராவதி மாவட்டத்தில் உள்ள ஹரிசால் கிராமத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் மரணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் காரணமாகவே இது சாத்தியமானது. 
மற்ற பணிகளைக் காட்டிலும் மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு ஒப்பந்தம் அளிப்பது வேறு மாதிரியாக இருக்கும். குறைந்த ஏலத்தொகையை அறிவிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை அளிக்க முடியாது; பணிகள் முடிவடைந்த பிறகே அதற்கான தொகை அளிக்கப்படும் என்றும் நிர்பந்திக்க முடியாது. எனவே, மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு புதிய முறையில் ஒப்பந்தம் அளிக்கப்படும். இன்னும் 2 மாதங்களில் இந்த நடைமுறை அமலுக்கு வரும்.
மக்களுக்கு அனைத்து சேவைகளும் வழங்குவதற்காக, ஆப்ளே சர்க்கார் என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தின் மூலம் இதுவரை 10 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். அந்த இணையதளத்தில், அனைத்து துறைகளின் திட்டங்களைக் கண்காணிப்பதற்காக, பிரத்யேக பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது என்று பட்னவீஸ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com