பாகிஸ்தானுக்கு மோடி அரசு பதிலடி கொடுக்கும்: யோகி ஆதித்யநாத்

பயங்கரவாத நடவடிக்கைககளை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தகுந்த பதிலடி கொடுக்கும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு மோடி அரசு பதிலடி கொடுக்கும்: யோகி ஆதித்யநாத்


பயங்கரவாத நடவடிக்கைககளை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தகுந்த பதிலடி கொடுக்கும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஒடிஸாவின் காளஹண்டி மாவட்டத்திலுள்ள பவானிபட்னாவில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் கூறியதாவது:
முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட தவறான கொள்கைகளால், நாட்டில் பயங்கரவாதம் அதிகரித்துள்ளது. தற்போது நிலவி வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை அழிக்க பாஜக உறுதி கொண்டுள்ளது. இதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் மட்டுமே நாடு பாதுகாப்புடன் திகழ முடியும். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மூலம், பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு தகுந்த பதிலடி கொடுக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. 
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், சுதந்திரமாகச் செயல்பட பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. பயங்கரவாதிகள் தாக்கினால் மட்டுமே திருப்பித் தாக்க வேண்டும் என்று காங்கிரஸ் அரசு அவர்களை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், தற்போது ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பது தெரிந்தாலே அவர்கள் மீது தாக்குதல் நடத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், பயங்கரவாதிகளும் தற்போது அச்சமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com