பிரதமர் மோடியின் ஊடக சந்திப்பு பற்றிய விபரங்கள்: கைவிரித்த பிரதமர் அலுவலகம் 

பதவியேற்ற பிறகு இதுவரை பிரதமர் மோடி நிகழ்த்தியுள்ள ஊடக சந்திப்பு பற்றிய விபரங்கள் தங்களிடம் இல்லை என்று பிரதமர் அலுவலகம் கைவிரித்துள்ளது.
பிரதமர் மோடியின் ஊடக சந்திப்பு பற்றிய விபரங்கள்: கைவிரித்த பிரதமர் அலுவலகம் 

புது தில்லி: பதவியேற்ற பிறகு இதுவரை பிரதமர் மோடி நிகழ்த்தியுள்ள ஊடக சந்திப்பு பற்றிய விபரங்கள் தங்களிடம் இல்லை என்று பிரதமர் அலுவலகம் கைவிரித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர் அனில் கல்காலி. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 8 - ஆம் தேதியன்று பிரதமர் அலுவலகதிற்கு ஒரு கேள்வியை அனுப்பினார். அதில் 2014-ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு இதுவரை பிரதமர் மோடி நிகழ்த்தியுள்ள ஊடக சந்திப்புகள், நேரடி பேட்டிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பேட்டிகள்  பற்றிய விபரங்களைக்  கோரியிருந்தார்.   

அத்துடன் மோடியிடம் எத்தனை ஊடக நிறுவனங்கள் பேட்டிக்காக நேரம் கேட்டிருந்தனர்? அதில் எத்தனை பேருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது என்பது குறித்தும் அவர் தகவல் கோரியிருந்தார். 

அவரது மனுவிற்குக் கடந்த மாதம் 7 - ஆம் தேதியன்றி பிரதமர் அலுவலக செயலரான பிரவின் குமார் அனுப்பியிருந்த பதிலில், 'விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் என்று கோரியிருந்தார். ஆனால் இதுவரை எதுவும் பதில் இல்லை. 

எனவே தற்போது முதல் மனுவினை அனுப்பி 68 நாட்கள் கடந்து விட்ட காரணத்தால், அணில் கல்காளி தனது முதல் மேல்முறையீட்டு மனுவினை அனுப்பி வைத்தார். அதற்கு பிரதமர் அலுவலகம் சார்பாக அளிக்கப்பட்டுள்ள பதிலில், பிரதமர் மோடியின் ஊடக சந்திப்புகள் முறையே ஒழுங்கான மற்றும் திட்டமிடாத சந்திப்புகள் என்பதால் அவற்றைப் பற்றிய விபரங்கள் எதுவும் கைவசம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அனில்  அளித்துள்ள பேட்டியில், இத்தகைய தகவல்களை தர மறுப்பதன் காரணமாக, மோடியை பிரதமர் அலுவலகம் தர்ம சங்கடமான நிலைமைக்கு உள்ளா க் கியிருப்பதாக தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com