தேவைக்கேற்பவே போர் விமானங்களின் எண்ணிக்கை

இந்திய விமானப் படைக்குத் தேவையான விமானங்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப மாறுபடும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தேவைக்கேற்பவே போர் விமானங்களின் எண்ணிக்கை

இந்திய விமானப் படைக்குத் தேவையான விமானங்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப மாறுபடும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ரஃபேல் ஒப்பந்தத்தில் முன்பு குறிப்பிடப்பட்ட 126 விமானங்களுக்குப் பதிலாக, 36 விமானங்களையே வாங்கும் முடிவை மத்திய அரசு மேற்கொண்டது தொடர்பாக காங்கிரஸ் கேள்வி எழுப்பி வரும் நிலையில், நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
கடந்த 2001-ஆம் ஆண்டு 126 போர் விமானங்களை கொள்முதல் செய்வதென முடிவெடுத்தபோது, இந்திய விமானப் படைக்கு தேவைப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால், 20 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே சூழ்நிலை நீடிப்பதில்லை. 
தற்போது நாம் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இச்சூழலில், ஒரு போரில் எதிரிகளின் எல்லைப் பகுதிக்கு தேர்ந்த விமானியுடன் கூடிய போர் விமானத்தை அனுப்புவோமா? அல்லது, ஆளில்லா விமானத்தை அனுப்புவோமா? ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப தேவை மாறுபடும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் இயக்கத் தயாரான நிலையில் 18 ரஃபேல் விமானங்கள் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது 36 ரஃபேல் விமானங்கள் இயக்கத் தயாரான நிலையில் வாங்கப்படுகின்றன. வரும் செப்டம்பர் முதல் அந்த விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com