விமானம் கடத்தப்படுவதாக தொலைபேசி மிரட்டல்: : விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு

இந்திய விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்படவிருப்பதாக சனிக்கிழமை விடுக்கப்பட்ட தொலைபேசி மிரட்டலையடுத்து, விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானம் கடத்தப்படுவதாக தொலைபேசி மிரட்டல்: : விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு

இந்திய விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்படவிருப்பதாக சனிக்கிழமை விடுக்கப்பட்ட தொலைபேசி மிரட்டலையடுத்து, விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு சிவில் விமானப் பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஏர் இந்தியாவின் மும்பை கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில், இந்திய விமானம் பாகிஸ்தானுக்கு சனிக்கிழமை கடத்தப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதனைக் கருத்தில் கொண்டு, விமானப் பாதுகாப்புப் படைகளும், விமான சேவை நிறுவனங்களும் 8 பாதுகாப்பு அம்சங்களை தீவிரப்படுத்த வேண்டும்.
அதன்படி, விமான நிலையம், விமானங்கள் நிற்கவைக்கப்பட்டிருக்கும் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெளியாட்கள் வருவது கடுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.
மேலும், வாகனங்கள் மூலம் குண்டுவெடிப்பு நடத்தப்படுவதைத் தடுப்பதற்காக வாகன சோதனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். பயணிகளின் உடமைகள், சரக்குப் பொருள்கள், உணவுப் பொருள்கள், கடிதங்கள் ஆகிய அனைத்தும் தீவிர சோதனைக்குள்படுத்தப்பட்ட பிறகே விமானங்களில் ஏற்றப்பட வேண்டும்.
சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும், நேரடியாகவும் விமான நிலையத்தைச் சுற்றிலும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
ஆபத்து நேரத்தில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, விமான நிலையங்களுக்கு மிக அருகே சிறப்புப் படையினர் நிறுத்தப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com