இந்தியா முழுவதும் பாலியல் குற்றவாளிகள் எண்ணிக்கை குறைந்ததா..? கூடியதா..? 

இந்தியா முழுவதும் கற்பழிப்பு, கூட்டு பலாத்காரம், போக்சோ குற்றங்கள் மற்றும் ஈவ் டீசிங் போன்ற பெண்களுக்கு எதிரான வழக்குகளில்
இந்தியா முழுவதும் பாலியல் குற்றவாளிகள் எண்ணிக்கை குறைந்ததா..? கூடியதா..? 


புதுதில்லி: இந்தியா முழுவதும் கற்பழிப்பு, கூட்டு பலாத்காரம், போக்சோ குற்றங்கள் மற்றும் ஈவ் டீசிங் போன்ற பெண்களுக்கு எதிரான வழக்குகளில் ஈடுபடுவோரின் குற்றவாளிகள் பெயர்கள் பட்டியலில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை இடம்பெற்று இருப்பதாக குற்ற ஆவண காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நாடு முழுவதும் பதிவாகும் குற்றங்கள் மற்றும் அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகள் பற்றிய தொகுப்பை தேசிய குற்ற ஆவண காப்பகம் தயாரித்து பராமரித்து வருகிறது. இதில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் பட்டியல் தனியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கற்பழிப்பு, கூட்டு பலாத்காரம், போக்சோ குற்றங்கள் மற்றும் ஈவ் டீசிங் போன்ற பெண்களுக்கு எதிரான வழக்குகளில் ஈடுபடுவோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளன. 

இதில், இந்தியா முழுவதும் உள்ள 5 லட்சத்துக்கும் அதிகமான பாலியல் குற்றவாளிகளின் பெயர்கள் இதுவரை இடம்பெற்று இருப்பதாக ஒரு மூத்த உள்துறை அமைச்சக அதிகாரி கூறியுள்ளார். 

பதிவேட்டில், குற்றவாளிகளின் பெயர், முகவரி, புகைப்படம், அடையாளங்கள், கைவிரல் ரேகை அனைத்தும் இடம்பெற்று இருக்கும் எனவும், இவை தனிநபர் பார்வைக்கு வழங்கப்படாது. பாலியல் குற்றங்களை விசாரிக்கும் நிறுவனங்களுக்கு உதவும் என்பதால் அவர்களுக்கு மட்டுமே அவை குறித்த விவரங்கள் வழங்கப்படும் எனவும் கூறினர்.

அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் டிரினிடாட் & டொபாகோ போன்ற சில நாடுகளில் பாலியல் குற்றவாளிகளின் பட்டியலை பராமரித்து வருகின்றனர். 

2015 ஆம் ஆண்டில் 34,651 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 2016 ஆம் ஆண்டில் 4296 கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்து 38,947 ஆக பதிவாகியுள்ளன. 2015 ஆம் ஆண்டில் 3,29,243 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2016 இல் 3,38,954 ஆக உயர்ந்துள்ளன.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குற்றங்கள் பற்றிய அறிக்கைகளை தேசிய குற்ற ஆவண காப்பகம் இன்னும் வெளியிடப்படவில்லை.

2016 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்ற வழக்குகளில் கணவன் அல்லது அவரது உறவினர்களால் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக (32.6 சதவீதம்) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பெண்கள் மீது தாக்குதல் (25 சதவீதம்), கடத்தல் மற்றும் பெண் கடத்தல் (19) சதவீதம்), கற்பழிப்பு (11.5 சதவீதம்) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2016 இல் மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 4,882 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 4,816, மகாராஷ்டிராவில் 4,189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com