அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்தாது: மன்மோகன் சிங்

எந்த சூழ்நிலையிலும் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையில் இந்தியா உறுதியுடன் இருக்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். 
அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்தாது: மன்மோகன் சிங்

எந்த சூழ்நிலையிலும் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையில் இந்தியா உறுதியுடன் இருக்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். 
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மன்மோகன் சிங் பேசியதாவது:
அணு ஆயுதப் பயன்பாட்டை கட்டுப்படுத்தக் கூடிய பல்வேறு ஒப்பந்தங்கள் காலாவதியாகிவிட்டதால், உலகளாவிய அளவில் அணு ஆயுத விவகாரத்தில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் அணு ஆயுத அறிவியல் மற்றும் தொழில்நுட்பமானது மிகவும் மேம்பட்டுள்ளது. அணு ஆயுதங்களைப் பெறுவதென்பது தற்போது எளிதா
கியுள்ளது. இதனால், இடர்களும், சவால்களும் அதிகரித்துள்ளன.
அணு ஆயுத விவகாரத்தில் திட்டமிடப்படாத எழுச்சி ஏற்பட்டுள்ளதால், அதைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. பல்வேறு நாடுகள் தங்களின் அணு ஆயுதங்களை நவீனமாக்கி வருகின்றன. அணு ஆயுதப் பரவல் தடை என்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. 
இந்தியாவைப் பொருத்த வரையில், எப்போதும் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையில் உறுதி கொண்டுள்ளது. அணு ஆயுதத் தடை தொடர்பாக விரிவான, நவீன அமைதித் திட்டங்களை கொண்டுள்ள ஒரே நாடு இந்தியா தான். பொக்ரானில் முதல் முறையாக அணு ஆயுதச் சோதனை நடத்திய பிறகு, சுமார் 25 ஆண்டுகள் வரையில் இந்தியா அணு ஆயுத விவகாரத்தில் சுயகட்டுப்பாட்டுடன் இருந்து வந்தது. அதையடுத்து அமைந்த அரசுகளும், இந்தியாவின் அணு ஆயுதத் தடைக் கொள்கையை அப்படியே கடைப்பிடித்து வந்தன. அதன் பலனாகவே, அணு சக்தி விநியோக நாடுகள் குழுவானது, இந்தியாவுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டில் சிறப்பு சலுகைகள் அளித்தது என்று மன்மோகன் சிங் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com