ஐந்து விமான நிலையங்களின் பராமரிப்பு ஒப்பந்தம் பெற்ற மோடியின் நண்பர் 

நாட்டில் உள்ள ஐந்து மத்திய தர விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தமானது பிரதமர் மோடியின் நண்பரான கவுதம் அதானியின் குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து விமான நிலையங்களின் பராமரிப்பு ஒப்பந்தம் பெற்ற மோடியின் நண்பர் 

புது தில்லி: நாட்டில் உள்ள ஐந்து மத்திய தர விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தமானது பிரதமர் மோடியின் நண்பரான கவுதம் அதானியின் குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னௌ, கவுகாத்தி, திருவனந்தபுரம் மற்றும் மங்களூரு ஆகிய விமான நிலையங்களின் பராமரிப்பு நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது என்று, கடந்த ஆண்டு நவம்பரில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.   

பொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட விமான நிலையங்களை பராமரிப்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடன் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டிருந்தது. மொத்தம் 10 நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தை பெற போட்டியிட்டன.

இந்நிலையில் இந்த ஐந்து மத்திய தர விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தமானது பிரதமர் மோடியின் நண்பரான கவுதம் அதானியின் குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

போட்டியிட்ட மொத்தம் பத்து நிறுவனங்களில் அதிகமான தொகைக்கு ஒப்பந்தம் கோரி இருந்த பிரபல தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னௌ, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய 5 விமானங்களை பராமரித்து நிர்வகிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 

கவுகாத்தி விமான நிலைய ஒப்பந்தம் தொடர்பாக தகவல் ஏஎதுவும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com