பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் பேட்டியை ஒளிபரப்பிய சேனல்களுக்கு நோட்டீஸ் 

புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவரின் பேட்டியை ஒளிபரப்பிய இரண்டு தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் பேட்டியை ஒளிபரப்பிய சேனல்களுக்கு நோட்டீஸ் 

புது தில்லி: புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவரின் பேட்டியை ஒளிபரப்பிய இரண்டு தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதியன்று சி.ஆர்.பி.எப் வீரர்களின் வாகனங்களின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 40 வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவமானது இந்திய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த கொடூர தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டு நடத்தியது தெரிய வந்தது. தற்போது தேசிய விசாரணை ஆணையம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவரின் பேட்டியை ஒளிபரப்பிய இரண்டு தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 22-ஆம் தேதியன்று பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியை இந்தியாவில் சில செய்தி சேனல்கள் ஒளிபரப்பு செய்தன.

இதையடுத்து 13 செய்தி சேனல்களுக்கு  மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது இரண்டு சேனல்களுக்கு மட்டுமே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸில் சேனல்களுக்கு என வரையறைக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறும் வகையில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒளிபரப்பு செய்வதோ அல்லது மறு ஒளிபரப்பு செய்வதோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com