
ஆமதாபாத்தில் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம், எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக 28ஆம் தேதி வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: நாட்டில் நிலவி வரும் பாதுகாப்பு சூழ்நிலைக் காரணமாக, கட்சியின் மேலிட உத்தரவுப்படி ஆமதாபாத்தில் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஆமதாபாத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஆமதாபாத்தில் நடைபெற உள்ள காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் சார்பில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.