Enable Javscript for better performance
பிகார் காப்பக வழக்கு: மார்ச் 2-இல் விசாரணை சிறப்பு வழக்குரைஞரை நியமித்தது சிபிஐ- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு இந்தியா

    பிகார் காப்பக வழக்கு: மார்ச் 2-இல் விசாரணை சிறப்பு வழக்குரைஞரை நியமித்தது சிபிஐ

    By DIN  |   Published On : 28th February 2019 01:11 AM  |   Last Updated : 28th February 2019 01:11 AM  |  அ+அ அ-  |  


    பிகார் காப்பக பாலியல் வன்கொடுமை வழக்கில், அரசுத் தரப்பு வழக்குரைஞர்களை சிபிஐ நியமித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை, வரும் மார்ச் 2-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தில்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் சிறார் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
    இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டு பிகார் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே, இந்த வழக்கு விசாரணை தாமதமானதால், அதிருப்தியடைந்த உச்சநீதிமன்றம், வழக்கை தில்லி நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த 7-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
    அதன்படி, தில்லியில் உள்ள சாகேத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை கடந்த சில தினங்களுக்கு முன் விசாரித்த நீதிமன்றம், அரசு தரப்பு வழக்குரைஞரை 2 நாள்களில் நியமிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது.
    இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செளரப் குல்ஷ்ரேஸ்தா முன்னிலையில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்குரைஞர்களாக அமித் ஜிண்டால், ஆர்.என்.சின்ஹா ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டிருப்பதாக சிபிஐ தெரிவித்தது. அவர்கள் இருவரும் நீதிபதி முன் ஆஜரானார்கள்.
    இந்த வழக்கில் சிறப்பு வழக்குரைஞராக செவ்வாய்க்கிழமை இரவுதான் நியமிக்கப்பட்டதால், வழக்கு தொடர்பான ஆவணங்களைப் படிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று அவர்கள் கூறினர்.
    இதையடுத்து, வழக்கின் வாதப் பிரதிவாதங்கள், வரும் மார்ச் 2-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று கூறிய நீதிபதி, ஆக்கப்பூர்வமான கருத்துகளுடன் வருமாறு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக, கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு சிபிஐ விரும்பினால், 15 நாள்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp