
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பத்திரமாக உடனடியாக திருப்பி ஒப்படைக்க என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் நேரில் வலியுறுத்தி உள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. செவ்வாய்க்கிழமை இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்த்தெறிந்தன. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது.
அதன் பின்னர் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையில் நுழைந்த இந்தியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், விமானி ஒருவரைப் பிடித்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்த நிலையில் விமானி அபிநந்தன் மாயமானதாக இந்திய தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிடியில் விமானி அபிநந்தன் உள்ளது உண்மைதான் என்று வெளியுறவுத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நேரில் வலியுறுத்தி உள்ளார்.
தில்லியில் உள்ள இந்தியாவிற்கான பாகிஸ்தான் துணை தூதரக அதிகாரியிடம் நேற்று நேரில் அழைத்து வலியுறுத்திய நிலையில் மத்திய அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் அபிநந்தனை உடனடியாக மற்றும் பாதுகாப்புடன் திருப்பி ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி பாகிஸ்தான் வெளிவிவகார துறையிடம் வலியுறுத்தி உள்ளது.
இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் ஜோவலுடன், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மீதான ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க ஆதரவளிக்கும் என உறுதியளித்தார்
பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தனை மீட்டு, இந்தியா அழைத்து வர அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்கிறது. அபிநந்தனின் தந்தையிடம் தொலைபேசி மூலம் பேசிய ஏர் சீஃப் மார்ஷல் பி.எஸ்.தனோவா உறுதி அளித்தார்.