2 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டோம்:  பாகிஸ்தான்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களை சுட்டுவீழ்த்தி விட்டதாகவும், விமானி ஒருவரை கைது


இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களை சுட்டுவீழ்த்தி விட்டதாகவும், விமானி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கஃபூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இருந்தபடியே, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் உள்ள 6 இடங்களில் பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்திய ராணுவ நிலைகள், பிற அமைப்புகள் ஆகியவைதான் குறிவைக்கப்பட்டன. ஆனால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு, இலக்குகளை பாகிஸ்தான் விமானங்கள் மாற்றிக் கொண்டன. இதனால் வெட்ட வெளிகளில் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அவற்றில் பிம்பர் கலி, நரான் ஆகிய இடங்களில் இருக்கும் ஆயுத விநியோக கூடங்களும் அடங்கும். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வான் பகுதிக்குள் மிக் ரகத்தைச் சேர்ந்த 2 இந்திய போர் விமானங்கள் ஊடுருவின.
அவற்றை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டுவீழ்த்தின. அதில் ஒரு விமானம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், இன்னொரு விமானம் ஜம்மு-காஷ்மீர் பகுதியிலும் விழுந்தன. விமானி அபிநந்தன் என்பவரை கைது செய்துள்ளோம். ராணுவ நெறிமுறைகளுக்கு உள்பட்டு அவர் நடத்தப்படுவார் (விமானியிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் சில ஆவணங்களையும் காண்பித்தார்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com