பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை

இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் இன்று(வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தினார். 
பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை


இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் இன்று(வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தினார். 

இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த செவ்வாய்கிழமை முதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்திய விமானி அபிநந்தன் நேற்று பாகிஸ்தான் வசம் சிக்கினார். இதையடுத்து, இருநாடுகளுக்கிடையிலான சூழல் மேலும் பரபரப்பானது. 

இதையடுத்து, இந்திய விமானியை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்தது. இந்நிலையில், இந்திய விமானியை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். 

இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட குழு திட்டமிட்டபடி இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்று பிரதமரிடம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்த கூட்டத்தில் அதிகாரிகளும் ஒரு சிலர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com