Enable Javscript for better performance
Washing workers' feet no political gimmick but 'sanskar': Narendra Modi- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு இந்தியா

    துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை கழுவியது அரசியல் தந்திரமா? பிரதமர் மோடி விளக்கம்

    By DIN  |   Published On : 28th February 2019 07:14 PM  |   Last Updated : 28th February 2019 07:14 PM  |  அ+அ அ-  |  

    modi_feet


    துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை கழுவியது எனது மதிப்பின் வெளிப்பாடு என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். 

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். பின்னர், கும்பமேளாவில் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டிருந்த துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை பிரதமர் மோடி சுத்தப்படுத்தினார். 

    இது பற்றி அவர் கூறுகையில், "சுமார் 20 - 22 கோடி மக்கள் கூடும் ஓரிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது மிகப்பெரிய காரியம். இந்த உலகில் எதையும் சாதிக்க முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துக்காட்டியுள்ளீர்கள். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். 

    இதையடுத்து, தேர்தல் நேரம் நெருங்குவதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியின் இந்த செயலை அரசியல் தந்திரம் என எதிர்க்கட்சிகள் விமரிசித்தனர். 

    இந்நிலையில், ஒரு கோடி பாஜக தொண்டர்கள் பங்கேற்கும் உலகின் மிகப் பெரிய காணொலி சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பேசுகையில், 

    "நான் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் பங்கேற்றிருந்தேன். அது சுத்தமாக இருந்ததாக மிகவும் பாராட்டப்பட்டது. சுமார் 22 கோடி மக்கள் கும்பமேளாவுக்கு வந்திருந்தனர். இந்த விஷயம் துப்புரவு தொழிலாளர்கள் எந்த அளவுக்கு உழைப்பை செலுத்தியிருப்பார்கள் என்று என்னை சிந்திக்க வைத்தது. அதனால், அவர்களது பாதங்களை கழுவி எனது நன்றியை தெரிவிக்க முடிவு செய்தேன். 

    எனது செயலை அரசியல் தந்திரம் என்று விமரிசிப்பவர்களுக்கு என்னை பற்றி தெரியாது. 

    குஜராத்தில் எனது இல்லத்தின் புதுமனை புகுவிழாவை எப்படி நடத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள். அரசின் 4-ஆம் நிலை ஊழியரை அழைத்து வருமாறு நான் தெரிவித்தேன். அவர்கள் தலித் நபரை அழைத்து வந்தார்கள். அவரது மகளின் கையில் நான் கலசத்தை கொடுத்தேன். இது கலாச்சாரத்தின் ஒரு அங்கம். இது எனது மதிப்பின் வெளிப்பாடு" என்றார்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp