எப்படி அனுப்பப்படுகிறார் அபிநந்தன்?; புதிய தகவல்கள் வெளியீடு 

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானி  அபிநந்தன் எப்படி திரும்ப அனுப்பப்படுகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
எப்படி அனுப்பப்படுகிறார் அபிநந்தன்?; புதிய தகவல்கள் வெளியீடு 

புது தில்லி: பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானி  அபிநந்தன் எப்படி திரும்ப அனுப்பப்படுகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதன்கிழமையன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படை விமானங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் மாயமானார். 

இந்த சண்டையில் இந்திய விமானப் படையின் மிக் ரக விமானத்தை துரதிருஷ்டவசமாக இழந்துள்ளோம் என்றும், அதில் இருந்த விமானி மாயமானதாகவும் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் புதன் காலை உறுதி செய்தார்.

அதேசமயம் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான் தங்கள் வசம் இருப்பாக தெரிவித்த பாகிஸ்தான்,  இது தொடர்பான சில விடியோக்களையும் நேற்று வெளியிட்டது. ஆனால் முதலில் இதனை இந்திய வெளியுறவுத் துறை உறுதி செய்யவில்லை. விசாரணை நடப்பதாக மட்டும் கூறி இருந்தது.

ஆனால் அதன் பின்னர் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு இந்திய வெளியுறவுத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது.

அதே தருணம் பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய விமானி அபிநந்தன் வெள்ளியன்று விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வியாழன் மாலை அறிவித்துள்ளார். அமைதியை விரும்பும்  நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுவிக்கப் படுவார் என  அந்நாட்டு பாராளுமன்றக் கூட்டத்தில் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் படையிடம் பிடிபட்ட இந்திய விமானியை மீட்க இந்தியா தரப்பில் மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்திலுமிருந்தும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானி  அபிநந்தன் எப்படி திரும்ப அனுப்பப்படுகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவமானது விமானி அபிநந்தனை வெள்ளியன்று லாகூரில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளது.

அதன் பின்னர் அவர் அங்கிருந்து மும்பை அல்லது தில்லிக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுவார் என்று அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com