படை வீரர்களின் தியாகத்தை அரசியலாக்குவதா?: பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

இந்தியப் பாதுகாப்புப் படையினரின் தியாகத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு அப்பட்டமாக அரசியலாக்குவதாக 21 எதிர்க்கட்சிகள் புதன்கிழமை கண்டனம் தெரிவித்தன.
தில்லியிலுள்ள நாடாளுமன்ற நூலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற (இடமிருந்து) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலை

மேலும், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருங்கிணைப்பைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை அந்தக் கட்சிகள் வலியுறுத்தின.
இதுகுறித்து நாடாளுமன்ற நூலக வளாகத்தில் புதன்கிழமை கூடிய 21 எதிர்க்கட்சித் தலைவர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஷ்மீரின் புல்மாவா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பால் இந்த மாதம் 14-ஆம் தேதி நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.
அந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலியும், பாதுகாப்புப் படையினருக்கு எங்களது ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது படை வீரர்களின் அத்தகைய உயிர்த் தியாகத்தை மத்தியில் ஆளும் பாஜக கட்சி தனது அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் செயலை ஒளிவு மறைவின்றி மேற்கொள்வது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருங்கிணைப்பை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு நாட்டை நம்பிக்கையின் பாதைக்கு மத்திய அரசு கொண்டு செல்ல வேண்டிய தருணமிது.
குறுகிய அரசியல் லாபத்தை விட தேசியப் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற நேரங்களில் வழக்கமாக நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட பிரதமர் நரேந்திர மோடி கூட்டாதது வருத்தமளிக்கிறது என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com