ரூ.20,000 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

கடந்த பத்து மாதங்களில் ரூ.20,000 கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கடந்த பத்து மாதங்களில் ரூ.20,000 கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மறைமுக மற்றும் சுங்க வரி ஆணைய உறுப்பினர் ஜான் ஜோசப் புதன்கிழமை கூறியதாவது:
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், இந்த பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் ரூ.20,000 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் ரூ.10,000 கோடி வசூலிக்கப்பட்டுவிட்டது.
ரூ.1,500 கோடி மதிப்பிலான போலி விற்பனைப் படிவங்களைப் பயன்படுத்தி ரூ.75 கோடி ஜிஎஸ்டி பெறப்பட்டுள்ளதை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கண்டறிந்தனர். அதில் ரூ.25 கோடி மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையையும் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வணிகர்களில் 5 முதல் 10 சதவீதத்தினர் மோசடியில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.
எனவே, வரி செலுத்துவதில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டறிவதற்கும், வரிவிதிப்பு விதிமுறைகள் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் தேவையான கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜிஎஸ்டி வரிவிகிதக் குறைப்புக்குப் பிறகு, மனை வணிகத் துறையினருக்கு வரி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக அந்தத் துறையின் பிரதிநிதிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளோம் என்றார் அவர்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இந்த வாரத் தொடக்கத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கட்டி முடிக்கப்படாத நிலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், மலிவு  விலை வீடுகளுக்கும் ஜிஎஸ்டி வரி விகிதத்தை 5 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்க முடிவெடுக்கப்பட்டது.
எனினும், இரும்புக் கம்பிகள், சிமென்ட் உள்ளிட்ட பொருள்களுக்கு நிறுவனங்கள் செலுத்திய கூடுதல் ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற முடியாத சூழல் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com