சபரிமலை விவகாரம்: பாஜக-மார்க்சிஸ்ட் கட்சியினர் மோதலில் காயமடைந்த கர்மா சமிதி அமைப்பை சேர்ந்தவர் உயிரிழப்பு

கேரளாவின் பந்தளத்தில் பாஜக-மார்க்சிஸ்ட் கட்சியினர் மோதலில் காயமடைந்த சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த சந்திரன் உன்னிதன் உயிரிழந்தார். 
சபரிமலை விவகாரம்: பாஜக-மார்க்சிஸ்ட் கட்சியினர் மோதலில் காயமடைந்த கர்மா சமிதி அமைப்பை சேர்ந்தவர் உயிரிழப்பு

கேரளாவின் பந்தளத்தில் பாஜக-மார்க்சிஸ்ட் கட்சியினர் மோதலில் காயமடைந்த சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த சந்திரன் உன்னிதன் உயிரிழந்தார். 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், கோயிலில் பாரம்பரியத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும்,  சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்கள்
தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பிந்து (45), கனகதுர்கா (42) ஆகியோர் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய என கடந்த மாதம் 24 ஆம் தேதி வந்தனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இருவரும் திரும்பிச் சென்றனர்.  இந்த நிலையில் மீண்டும் சபரிமலை வந்த இருவரையும் போலீஸார் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் புதன்கிழமை அதிகாலையில் ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது.

இச்சம்பவத்தைக் கண்டித்து பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சபரிமலை பந்தளத்தில் பாஜக நடத்திய போராட்டத்தில் பாஜக-மார்க்சிஸ்ட் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது இருத்தரப்பினரும் கல் வீசி தாக்கிக் கொண்டனர். இதில் சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த சந்திரன் உன்னிதனும்(55) தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சந்திரன் உன்னிதன் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com