ஆதார் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

வங்கி கணக்கு தொடங்கவும், செல்லிடப்பேசி இணைப்பு பெறுவதற்கும் ஆதாரை விருப்பத்தின் பேரில் அளிக்க அனுமதிக்கும் ஆதார் சட்டத் திருத்த மசோதா

வங்கி கணக்கு தொடங்கவும், செல்லிடப்பேசி இணைப்பு பெறுவதற்கும் ஆதாரை விருப்பத்தின் பேரில் அளிக்க அனுமதிக்கும் ஆதார் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, ஆதார் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆதார் திட்டம், அரசமைப்புச் சட்டப்படி செல்லும்; பான் கார்டு, வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதார் கட்டாயம் என்று தெரிவித்தது.
அதேவேளையில், வங்கி கணக்கு, செல்லிடப்பேசி இணைப்பு, பள்ளி மாணவர்களின் சேர்க்கை ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை என்று தெரிவித்தது.
இத்தீர்ப்பின் அடிப்படையில், ஆதார் மற்றும் அதுசார்ந்த மேலும் இரு சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான மசோதா, மக்களவையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கி கணக்கு தொடங்கவும், செல்லிடப்பேசி இணைப்பு பெறுவதற்கும் ஆதாரை விருப்பத்தின் பேரில் இணைக்க இந்த மசோதா அனுமதிக்கிறது. ஆதார் இல்லை என்பதற்காக மேற்கண்ட சேவைகள் மறுக்கப்பட கூடாது என்பதை உறுதி செய்யும் இந்த மசோதா, ஆதார் தகவல் பயன்பாட்டு விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் வழிவகை செய்கிறது.
இந்நிலையில், மக்களவையில் ஆதார் சட்டத் திருத்த மசோதா மீது வெள்ளிக்கிழமை பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆதார் திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டுள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பின்னர், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com