பயணிகள் கவனத்திற்கு: விமான நிலையங்கள் போல் ரயில் நிலையங்களிலும் புதிய திட்டம் 

பயணிகள் கவனத்திற்கு: விமான நிலையங்கள் போல் ரயில் நிலையங்களிலும் புதிய திட்டம் 

பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் ரயில் பயணிகள், ரயில் புறப்படுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே ரயில் நிலையத்திற்கு வர வேண்டும் என்கிற புதிய திட்டத்தை இந்தியன் ரயில்வே அமல்படுத்தவுள்ளது. 


பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் ரயில் பயணிகள், ரயில் புறப்படுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே ரயில் நிலையத்திற்கு வர வேண்டும் என்கிற புதிய திட்டத்தை இந்தியன் ரயில்வே அமல்படுத்தவுள்ளது. 

விமான நிலையங்களை போல் ரயில் நிலையங்களையும் பாதுகாப்புமயமாக்க இந்தியன் ரயில்வே புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ரயில் நிலையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த 202 ரயில் நிலையங்களில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்புக்கு 2016-இல் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் சிசிடிவி கேமிராக்கள், வெடிகுண்டு கண்டறியும் கருவி, பைகளை கண்காணிக்கும் அமைப்பு உள்ளிட்டவை அடங்கும். 

இந்நிலையில், இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை பொதுத் தலைமை இயக்குநர் அருண் குமார் கூறுகையில்,  

"உயர்தர தொழில்நுட்பங்கள் கொண்ட இந்த பாதுகாப்பு திட்டம், இந்த மாதம் கும்பமேளா தொடங்க இருப்பதை முன்னிட்டு பிரயக்ராஜில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடக மாநிலம் ஹூப்லியிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 202 ரயில் நிலையங்களில் இதை செயல்படுத்தவதற்கான செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படும் நிலையில் தயாராக உள்ளது. 

இந்த திட்டம் காரணமாக, ரயில் நிலையங்களில் ஒவ்வொரு நுழைவாயிலிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த சோதனைக்காக பயணிகள் விமான நிலையங்கள் போல் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம், ரயில் புறப்படுவதற்கு 15-20 நிமிடங்கள் முன்பு பயணிகள் ரயில் நிலையத்தை வந்தடையவேண்டும். பாதுகாப்பு சோதனைகள் காரணமாக ரயிலை தவறவிடக்கூடாது என்பதற்காக 20 நிமிடங்கள் முன்னதாக ரயில் நிலையத்தை வந்தடையவேண்டும். 

ரயில் நிலையங்களில் சோதனைகள் அதிகப்படுத்தப்படுவதால் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்காது. தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவுள்ளதால், ஊழியர்களின் எண்ணிக்கை குறையும். 

இந்த பாதுகாப்பு திட்டம், ரயில் நிலையங்களின் முதல் அடுக்கு பாதுகாப்புக்கு உதவும். ரயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பே பயணிகள் சோதனைக்குட்படுத்தப்படுவதால் முக்கிய நேரங்களில் ரயில் நிலையத்தில் இருக்கும் நெருக்கடியை இது தணிக்கும். இந்த திட்டத்தில் அடையாளம் கண்டறியும் தொழில்நுட்பமும் உள்ளடங்கும், அதன்மூலம், அறிந்த குற்றவாளிகளை அடையாளம் கண்டு ரயில்வே பாதுகாப்பு போலீஸாருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். 

குறிப்பிட்ட பயணிகள் என்று தேர்ந்தெடுக்கப்படாமல் ரயில் நிலையத்துக்குள் நுழையும், ஒவ்வொரு 8-ஆவது அல்லது 9-ஆவது பயணி இந்த சோதனை நடைமுறைக்கு உள்ளாவார்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com