மன்னிப்பு கேட்பாரா ராகுல் காந்தி? நிர்மலா சீதாராமன் பதிலடி 

மன்னிப்பு கேட்பாரா ராகுல் காந்தி? நிர்மலா சீதாராமன் பதிலடி 

​ராகுல் காந்தியின் டிவிட்டர் பதிவுக்கு பதிலடி தரும் வகையில், ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஆர்டர்களின் ஆவணத்தை பதிவிட்டு நிர்மலா சீதாராமன் பதிலடி தந்துள்ளார்.  


ராகுல் காந்தியின் டிவிட்டர் பதிவுக்கு பதிலடி தரும் வகையில், ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஆர்டர்களின் ஆவணத்தை பதிவிட்டு நிர்மலா சீதாராமன் பதிலடி தந்துள்ளார்.  

மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது. 

இந்த விவாதத்தின் போது, ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான கொள்முதல் ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் மக்களவையில் பதிவிட்டார். 

ஆனால், ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான ஆர்டர்கள் மூலம் ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு இதுவரை 1 ரூபாய் கூட வரவில்லை என்று ஹெச்ஏஎல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. 

இந்த செய்தியை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், "ஒரு பொய்யை கூறிவிட்டால் அதை மறைக்க பல பொய்களை கூறவேண்டும். ரஃபேல் விவகாரத்தில் பிரதமரின் பொய்யை பாதுகாக்க, பாதுகாப்புத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பொய் சொல்லிவிட்டார். ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான அரசு ஆர்டர்களின் ஆவணங்களை நாளை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் ராஜிநாமா செய்யவேண்டும்" என்றார்.

 

இதற்கு பதிலடி தரும் வகையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அலுவல் டிவிட்டர் பக்கத்தில், ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் போடப்பட்ட ரூ.26,570.8 கோடி மதிப்பிலான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டார். மேலும், 73,000 கோடி மதிப்புடைய ஒப்பந்தங்களும் திட்டப்பணியில் உள்ளது என்பதையும் குறிப்பிட்டார். இதை குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா? என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com