முற்பட்ட சமூகத்தினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: யாரெல்லாம் தகுதியானவர்கள்?

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்தினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை இன்று (திங்கள்கிழமை) ஒப்புதல் வழங்கியது. 
முற்பட்ட சமூகத்தினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: யாரெல்லாம் தகுதியானவர்கள்?


பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்தினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை இன்று (திங்கள்கிழமை) ஒப்புதல் வழங்கியது. 

இந்தியாவில் சாதிய ரீதியிலான இடஒதுக்கீட்டுக்கு ஆங்காங்கே அவ்வப்போது எதிர்ப்புகள் கிளம்பும். அதற்கு மாற்றாக வைக்கப்படும் தீர்வு, இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்கப்படவேண்டும் என்பது. இந்த விவாதம் இந்தியாவில் நீண்ட காலமாக ஒலித்துக்கொண்டே தான் உள்ளது. 

இந்நிலையில், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டுக்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்று வழங்கியுள்ளது. அதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது. 

இந்த இடஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் யார்?

  • ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள்
     
  • 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்கள்
     
  • 1000 சதுரஅடிக்கு குறைவாக வீடு வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 
     
  • நகராட்சிக்குட்பட்ட இடத்தில் 1000 சதுரஅடிக்கு குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் 
     
  • நகராட்சி அல்லாத இடத்தில் 2000 சதுரஅடிக்கு குறைவாக வீட்டு மனை வைத்திருப்பவர்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com